Sunday, 10 April 2022

அரச விடுமுறை - அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது!

SHARE


 நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார்.


இதேவேளை, வங்கிச் சேவைகள் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 11 ஆம், 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், மக்களின் வசதி கருதி குறித்த தினங்களில் வங்கிகள் வழமை போன்று செயற்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளையும் நாளை மறுதினமும் அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையக்கூடாது என்றும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி மேலும் அறிவித்துள்ளார்.
SHARE