Monday, 11 April 2022

இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

SHARE


 ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ​தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றுடன் 48 மணித்தியாலங்களை கடந்துள்ளது.

எவ்வாறாயினும், கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நேற்று (10) காலி முகத்திடல் மைதானத்தில் முகாமிட்டிருந்ததை காணமுடிந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

சிலர் ஆர்ப்பாட்டத்திற்கு உணவு மற்றும் பானங்களை வழங்க முன்வந்துள்ளதுடன் மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளையும் அகற்றி வருவதை அவதானிக்க முடிந்தது.
SHARE