வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!!
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராசா கேதீஸ்வரன் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது தோட்டத்திற்கு மின் விளக்கின் ஒளியில் நீர் பாய்ச்சிக்கொண்டு இருந்த போது , மின் விளக்குக்கு பொருத்தப்பட்ட வயர் நீரில் தொடுகையுற்ற போது , அதனூடாக மின்சாரம் இளைஞனை தாக்கியுள்ளது.
அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்து மீட்டு வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்