Friday, 8 April 2022

தொடர்ந்தும் நிதி அமைச்சராக கடமையாற்றும் அலி சப்ரி ..!!!

SHARE

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய தாம் தொடர்ந்தும் நிதி அமைச்சராக கடமையை தொடர்வதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினாமா செய்தமையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்கவில்லை என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததையடுத்து, முன்னாள் நீதி அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், 24 மணித்தியாலங்களின் பின்னர் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.

அவரின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாததால், அலி சப்ரி இலங்கையின் நிதி அமைச்சராக தொடர்ந்து செயற்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
SHARE