Saturday, 5 February 2022

கத்திக்குத்துக்கு இலக்காகி மாணவி பலி

SHARE

 


கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கந்தளாய், அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி வீட்டில் இருந்த போது கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காதலன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது சிறுமியின் தாயும் வீட்டில் இருந்துள்ளதுடன், தாக்குதல் இடம்பெற்ற போது சந்தேகநபர் வீட்டில் பதுங்கியிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞன் கந்தளாய் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
SHARE