பீஸ்ட் பட அரபிக் குத்து பாடல் வெளியானது..!!!
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.
கடந்த வாரம் இந்தப் படத்தின் ப்ரமோ வெளியாகி வைரலானது. இந்த ப்ரமோவில் விஜய்யும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொலைபேசியின் மூலம் குரல் அனிருத் மற்றும் நெல்சனை கலாய்த்தது அந்த ப்ரமோவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கவிருப்பதால் பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.