Friday, 4 February 2022

மின்சார விநியோகம் தடைபடும் அபாயம்

SHARE


 இன்று (04) பல மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் கையிருப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மின்சார விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு தேவையான டீசல் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் நேற்றும் (03) அனல்மின் நிலையம் செயலிழந்திருந்தது.

கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு போதிய எரிபொருள் கையிருப்பு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால், தேசிய மின்கட்டமைப்பு 360 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளது.

போதிய மின் விநியோகம் இன்மையால் நேற்றிரவு சுமார் ஒரு மணித்தியாலம் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE