மின்சார விநியோகம், வைத்தியசாலைகள் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!!!
அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மின்சாரம் விநியோகம் , வைத்தியசாலைகள், சிகிச்சையகங்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு, சிகிச்சை ஆகியவை தொடர்பில் ஆற்றப்படவேண்டிய அனைத்து அவசியமான அல்லது தேவைப்படும் தேவைகள் மற்றும் பணிகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.