Sunday, 6 February 2022

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி

SHARE


 வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பரவில போலான பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார், உயிரிழந்த நபரின் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
SHARE