எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்..!!!
எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சுமித் விஜேசிங்க, இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விலைகளை அதிகரிக்க முடியாது எனவும், இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.