Saturday, 5 February 2022

நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் பலி

SHARE

 


கிரிஹேன பிரதேசத்தில் உள்ள ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து நேற்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி மற்றுமொரு குழுவினருடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அன்ஹெட்டிகம பிரதேசத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
SHARE