Friday, 4 February 2022

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

SHARE

 


அடித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


பயாகல கடற்கரையில் தலுவத்த பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள இடமொன்றில் இன்று (04) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை, அவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என நம்பப்படுகிறது.

உடலில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
SHARE