நேற்று மகள் ; இன்று தந்தை - தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!!!
தவறான முடிவெடுத்து மகள் நேற்றைய தினம் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், மகளின் இழப்பை தாங்க முடியாத தந்தை இன்றைய தினம் தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் கிரிஷ்கா (வயது 17) ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் நிலையில் அங்கு தன்னுடன் வேலை செய்யும் இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரிந்த நிலையில் அவர் அதனை கண்டித்துள்ளார். அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மகள் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
யுவதி உயிரிழந்த நிலையில் அயலவர்கள் உறவினர்கள் , யுவதியின் உயிரிழப்புக்கு தந்தையே காரணம் என குற்றம் சாட்டிய நிலையில், யுவதியின் தந்தை இன்றைய தினம் புதன்கிழமை காலை தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
ஒரே வீட்டில் அடுத்தடுத்த நாளில் மகளும் தந்தையும் தமது உயிரை மாய்த்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.