Saturday, 5 February 2022

காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

SHARE

 


பனாமுர ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


காணி தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமல்பே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE