Friday, 11 February 2022

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் ராசிகள்: இந்த நான்கு ராசிக்காரங்களை மறந்திடாதீங்க..!!!

SHARE

12 ராசிகளும் வெவ்வேறு கிரக அதிபதிகளைக் கொண்டுள்ளன. வெவ்வேறு ராசிக்காரர்களின் இயல்பு மற்றும் ஆளுமை வேறுபடும். ஒரு நபரின் பிறப்பின்போது அமையும் ஜாதக நிலைகளின் அடிப்படையில், அவரது எதிர்காலம் மற்றும் இயல்புகளை எளிதாக அறிய முடியும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் கஞ்சர்களாக இருப்பார்கள், சிலர் பணத்தை யோசிக்காமல் செலவழிப்பார்கள். கேளிக்கைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் செலவு செய்யும்போது சிறிதுகூட யோசிக்காத ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பொழுதுபோக்கிலும், கேளிக்கையிலும் பணத்தைச் செலவு செய்வதில் சற்றும் யோசிக்க மாட்டார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள் இயற்கையாகவே இருக்கும்.

மேலும் ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர கிரகத்தின் தாக்கத்தால் வாழ்வில் சகல சுகபோகங்களையும் பெறுகிறார்கள். கஞ்சத்தனம் என்பது இவர்களின் ரத்தத்தில் கண்டிப்பாக இல்லை. இவர்கள் சுவையான உணவுகளை விரும்புவார்கள். அதுமட்டுமின்றி, விலை உயர்ந்த பொருட்களை வாங்க விரும்புவார்கள்.

மிதுனம்

ஜோதிடத்தின் படி மிதுன ராசியை புதன் ஆட்சி செய்கிறார். புதன் கிரகத்தின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இது மட்டுமின்றி, ஜோதிட சாஸ்திரத்தில் புதன் வியாபாரத்தின் அதிபதி என அழைக்கப்படுகிறார்.

இவர்களுக்கு மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு வேலையைச் செய்ய முடிவு செய்தால், அதை முடித்த பின்னரே இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். வசதிக்காகப் பணம் செலவழிக்க இவர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.

சிம்மம்

சூரிய பகவானால் ஆளப்படும் ராசி என்று ஜோதிடம் கூறுகிறது. இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள். மேலும், சூரிய பகவான் கிரகங்களுக்கு ராஜா என்பதால், இந்த ராசிக்காரர்களும் மன்னர்களைப் போலவே வாழ்கிறார்கள்.

அவர்கள் தங்கள் வசதிகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற கடினமாக உழைக்கிறார்கள். இவர்கள் பிராண்டட் பொருட்களுக்கு அதிக பணம் செலவழிக்கிறார்கள்.

துலாம்

ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்புவார்கள். துலா ராசியை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். சுக்கிரன் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணங்களைத் தருகிறார். சுக்கிரன் கிரகம் பொருள் இன்பங்களுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது.

யாருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறாரோ, அவருக்கு அனைத்து சுகங்களும் கிடைக்கும். அதுமட்டுமின்றி இவர்களின் ஆசைகளும் சற்று அதிகமாகவே இருக்கும். செல்லும் இடத்தில் எல்லாம் பணம் செலவழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இவர்கள்.
SHARE