Friday, 4 February 2022

"ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்" - யாழில் போராட்டம்..!!!

SHARE

சுதந்திர தினமான இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் பகுதி வரை பேரணியாக சென்றனர்.




SHARE