Monday, 7 February 2022

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

SHARE

 


இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது.


இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2,438 நிலையங்களில் மொத்தம் 345,242 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக 29 சிறப்பு மையங்களில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SHARE