கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்து எழுந்துள்ள அவதானம்
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மகப்பேறு மருத்துவர் வைத்தியர் சனத் லெனரோல் கூறியதாவது,
"கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது."
"எனவே, இந்த காய்ச்சலுடன் 4-5 நாட்கள் வீட்டிலேயே இருந்தால், நோய் தீவிர நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
"எனவே, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்