Saturday, 12 February 2022

போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோரை எச்சரிக்கும் சுகாதார அமைச்சு..!!!

SHARE

கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி பெறுவதைத் தவிர்ப்பதற்காக போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோரை  சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் இருப்பதாகவும், தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி என்றும் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

மேலும் ,”தடுப்பூசி பெற்றுக்கொள்வது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசியை பெற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஒக்சிஜன் தேவைப்படும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 5% – 10% அதிகரித்துள்ளது என்று பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
SHARE