Sunday, 6 February 2022

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

SHARE

 


திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று இன்று (6) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்த காட்டு யானையின் வயது 15 முதல் 20 வயதுடையது எனவும், கால்நடை வைத்தியரின் தலையீட்டில் யானையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் வனஜீவராசி அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிதுலுத்துவ பிரதேசத்தில் யானைகளில் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் மற்றும் மனிதப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும், காட்டு யானைகள் அதிகம் காணப்படும் கந்தளே கிதுலுத்துவ பிரதேசத்தை உள்ளடக்கிய கிராமத்தை பாதுகாப்பதற்காக யானை வேலி அமைப்பதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டு யானை இறந்துள்ள பகுதியில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பித்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE