Friday, 4 February 2022

மட்டக்களப்பில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்

SHARE


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரால் சம்பவ இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
SHARE