Friday, 11 February 2022

ஒமிக்ரோன் பரவலுக்குப் பின் 5 லட்சம் பேர் பலி

SHARE

 


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மற்ற கொரோனா தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு உலகளவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, உலகளவில் 5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல, ஒமிக்ரோன் பரவத் தொடங்கிய பிறகு, உலகளவில் 13 கோடிப் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதகாவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருந்தவர்களுக்குத்தான் ஒமிக்ரோன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.
SHARE