Sunday, 13 February 2022

30 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

SHARE

 


வத்தேகம எல்கடுவ வீதியின் 2/3 பாலத்திற்கு அருகில் வத்தேகம நோக்கி பயணித்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த லொறியில் பயணித்த நபர் ஒருவர் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

எனினும், லொறியின் சாரதி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
SHARE