Friday, 4 February 2022

திடீரென மயங்கி விழுந்த மாணவிகள் உட்பட 18 பேர்

SHARE

 


வவுனியாவில் மாணவிகள் உள்ளிட்ட 18 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.


இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நகரசபை மைதானத்தில் இன்று (4) காலை இடம்பெற்றது.

இதன்போது அணிவகுப்பில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், பொலிசார், இராணுவத்தினர் ஆகியோர் பிரதான நிகழ்வு கொட்டகைக்கு முன்னால் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை முடிந்த பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு ஒணித்தியாலத்திற்கு மேலாக குறித்த மாணவர்கள், இராணுவத்தினர், பொலிசார், சிவில் பாதுகாப்பு தரப்பினர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமையால் வெயில் தாக்கம் காரணமாக 13 மாணவர்களும், 5 சிவில் பாதுகாப்பு படை வீரர்களுமாக 18 பேர் மயங்கமடைந்திருந்தனர்.

அவர்களை உடனடியதாக செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் அழைத்து சென்று நோயாளர் காவு வண்டியில் வைத்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.

பல மாணவர்கள் மயங்கி விழுவதை அவதானித்த நிகழ்வின் அதிதியாகிய கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் வெயிலில் நின்ற மாணவர்களுடன் உரையாடி விட்டு உடனடியாக அம் மாணவர்களை அங்கிருந்து சென்ற பின் ஏனைய நிகழ்வுகளை நடத்துமாறு அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதன் பின் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிசார், இராணுவத்தினர் மைதானத்தில் இருந்து கலைந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE