Thursday, 10 February 2022

யாழ்.நகர் மத்தியில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்த நாய் - தகவல் தெரிந்தால் மாநகர சபைக்கு அறிவியுங்கள்..!!!

SHARE

யாழ்.நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டித்துள்ளது.

யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.

அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
SHARE