Sunday, 14 November 2021

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.எம்.சி.ஜே.பி. பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நாளை திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார்.

அந்த வெற்றிடத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் பதில் கடமைக்கு அமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையில் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.எம்.சி.ஜே.பி. பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் ஒரே நேரத்தில் பல பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றில் வரலாற்றில் முதன்முறையாக பொலிஸ் மருத்துவ சேவைப் பிரிவுக்கு மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

நான்கு மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களும் 10 தலைமை பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 15 தலைமைப் பொலிஸ் பரிசோதகர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
SHARE