மடபாத, பொல்ஹேன பகுதியில் வீடொன்றின் முன்னால் உள்ள வீதியில் நின்று கொண்டிருந்த நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதலுக்கு உள்ளானவரின் கை இரண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதுடன் காலிலும் வெட்டுக்காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
42 வயதுடைய ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.