Monday, 15 November 2021

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்..!!!

SHARE

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து மன்னார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் எரி பொருள் நிரப்புவதற்கு என குவிந்ததை அவதானிக்க கூடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலையிலேயே இவ்வாறு மக்கள் மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலி குவித்திருந்தனர்.

பெற்றோல் மற்றும் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்களுக்கான எரி பொருளை நிரப்பி சென்றுள்ளனர் .
SHARE