Monday, 15 November 2021

அடம்பிடிக்கும் சீனா! தொடர்ந்து நிராகரித்து வரும் இலங்கை..!!!

SHARE

சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும், ஆலை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட உரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பக்டீரியா இருப்பது இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து குறித்த உரம் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டு, கப்பல் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தது. ஆனாலும் குறித்த கப்பல் சீனாவுக்கு திரும்பாமல் மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் வந்திருந்தது.

இலங்கையின் குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சீனா, மூன்றாம் தரப்பினூடாக உரத்தை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றது.

இந்த நிலையிலேயே சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென இலங்கை அரசாங்கத்திடமிருந்து பதில் வெளிவந்துள்ளது.
SHARE