லிந்துலையில் தபாலகமும் தேவாலய சுரூபமும் சேதம் செய்யப்பட்ட விவகாரம்..!!!
கிறிஸ்தவ தேவாலய சுரூபமும் மற்றும் தபால் நிலையம் ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரை இன்று அதிகாலை லிந்துலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் லிந்துலை காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட நாகசேனை நகரில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதே வேளை தபாலகம் அமைந்துள்ள பகுதியியில் உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட கிறிஸ்தவ சுரூபமும் உடைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஆலயத்தின் முன்பகுதியில் இருந்த ஏனைய பொருள்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை காவல்துறையினர் தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமயலறைக்கு சென்ற பொழுது, அங்கிருந்த 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் லிந்துலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.