நாட்டில் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளது - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன..!!!
பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதன் காரணமாக போதைப்பொருள் வர்த்தகம் செயலிழந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டில் போதைப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.