Sunday, 14 November 2021

அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிப்பர்..!!!

SHARE

2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் (SLPPU) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளர் வி.ஏ.பி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால், அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
SHARE