போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள இராணுவத் வீதித்தடை..!!!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கொரோனா காலப்பகுதியில் பயணத்தடை நடைமுறையில் இருந்த போது வீதியில் போடப்பட்ட வீதி தடைகள் அகற்றப்படாமையினால் பாரிய இடர்களை சந்தித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து மாத்தளன் வீதி சந்தியில் இருந்து ஒட்டுசுட்டான் வீதி சந்தியில் இருந்து பரந்தன் வீதி சந்தியில் இருந்து முல்லைத்தீவு வீதி என நான்கு வீதிகளிலும் குறித்த வீதித்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக இடையூறாக வைக்கப்பட்டுள்ள குறித்த வீதி தடைகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அதிக மக்கள் நடமாட்டம் உள்ள குறித்த நகர் பகுதியில் ஒரு வீதியில் இருந்துவரும் வாகனங்கள் மறு வீதிக்கு திரும்புவதற்கு பாரிய இடையூராக குறித்த வீதி தடைகள் காணப்படுகின்றன.
இவ்வாறு போக்குவரத்துக்கு பாரிய இடையூறாக காணப்படும் இந்த வீதி தடைகளை அகற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அதிகளவான சோதனை சாவடிகளும் வீதி தடைகளும் உள்ளதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருவதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளாவான சோதனை சாவடிகள் வீதி தடைகள் மக்களுக்கு பாரிய இடையூறாக அமைந்துள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி வீதியில் பாரிய போக்குவரத்து இடையூறை ஏற்ப்படுத்தும் இந்த தடைகளை அகற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்