ஒரு கிலோ தக்காளியின் விலை 600 ரூபாய்..!!!
நுவரெலியாவில் மரக்கறிகளின் விலைகள் கடுமையாக அதிகரித்தமையினால் நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய சிரமத்திற்குள்ளாகினர்.
நுவரெலியா வாரச்சந்தையில் ஒவ்வொரு கிலோ மரக்கறிகளும் ரூ. 400 ஆகவும், தக்காளி கிலோ ரூ. 600க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை உயர்வால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாரச்சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர்.
இன்னும் சில வாரங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், காய்கறிகளின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நுகர்வோரும், தாங்களும் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டும் அபாயம் உள்ளதாக நுவரெலியா வாரச்சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.