Friday, 9 July 2021

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு..!!!

SHARE

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றை நடாத்துவதற்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
SHARE