காரைநகரில் 12 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று..!!!
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 309 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 20 பேர் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில்,
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் 07 பேருக்கு தொற்றுறுதி,
இதேவேளை,
முழங்காவில் இலங்கை கடற்படை முகாமில் ஐந்து பேர்,
பலாலி விமானப்படை முகாமில் ஒருவர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று 192 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று அறிகுறி இனங்காணப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.