Friday, 11 June 2021

வங்கிகளில் கடன் பெற்றோருக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு..!!!

SHARE


அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து மக்கள் பெற்றுக்கொண்ட தனிநபர் கடன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிவாரணம் வழங்கப்படாதவிடத்து 011 2477966 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மக்கள் சுமைகளை குறைப்பதற்காக வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட தனிநபர் கடன்களுக்கு சலுகைகளை அல்லது நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE