யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வடைந்துள்ளது.