Saturday, 12 June 2021

இஸ்ரேலில் ஆச்சரியம் - 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு..!!!

SHARE



இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.
கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது அகழ்வாராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதனை மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என அகழ்வாராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

இந்த முட்டையை கண்டெடுத்த அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒருவர் இதுபற்றி கூறுகையில், “முந்தைய காலங்களில் டோவிட், சிசோரியா மற்றும் அப்போலினயா போன்ற நகரங்களில் முட்டை துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முட்டைகளின் உடையக்கூடிய தன்மை காரணமாக, உலக அளவில் கூட எந்த கோழி முட்டைகளும் இதுவரை பாதுகாக்கப்படவில்லை.‌ எனவே இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு” என கூறினார்.

SHARE