யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி,மணிவண்ணன் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார் என போலி முகநூல்கள் ஊடாக விசமத்தனமான பதிவுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர முதல்வர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள மாநகர முதல்வர் ஓரிரு நாட்களில் வீடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில் இன்றையதினம் சிலர் போலி முகநூல்கள் ஊடாக முதல்வர் உயிரிழந்துள்ளார் என விசமத்தனமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.