Saturday, 3 April 2021

பொலிஸாரை தாக்க முடியாது - அஜித் ரோகண..!!!

SHARE

சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை யாராலும் தாக்கவோ அல்லது அவர்களது கடமைகளைத் தடுக்கவோ முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட கருத்துத் தவறாகப் புரிந்துகொண்டு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறினார்.

கொழும்பில் கனரக வாகன சாரதி ஒருவரை வீதியில் வைத்து போக்குவரத்து பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சைகள் எழுந்திருந்தன.

அந்நிலையில் "பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பொதுமகன் மீது தாக்குதல் நடாத்தினால் , தற்காப்புக்காக பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முடியும் " எனும் தொனிப்பட பொலிஸ் ஊடக பேச்சாளர் கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் கருத்து பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE