Friday, 2 April 2021

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் அன்பழகன் காலமானார்..!!!

SHARE

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வேலுப்பிள்ளை அன்பழகன் காலமானார்.

புற்றுநோய்த் தாக்கத்தால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர், கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அன்பொளி கல்வியகத்தில் கல்வி பயில்வதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வருவர்.

அன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE