Friday, 2 April 2021

ஸ்கந்தவரோதயா- யாழ்.மத்தி சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டி - பங்கேற்ற வீரருக்கு கொரோனா..!!!

SHARE


சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி - யாழ்.மத்திய கல்லூரி சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் உட்பட போட்டியில் பங்கேற்ற இரு பாடசாலை கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஸ்கந்தவரோதயக்கல்லூரி - யாழ். மத்திய கல்லூரி சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் பங்கேற்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் தந்தைக்கு ஏற்கனவே தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே மாணவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற இரு பாடசாலை கிரிக்கெட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE