Friday 4 September 2020

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்; அரச உதவி கோருகின்றனர் பெற்றோர்..!!!(Video)

SHARE

யாழ்ப்பாணம் - கட்டுவன் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்தவர். குழந்தைகள் நால்வரும் முழுமையான ஆரோக்கியத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அவர்களை வளர்ப்பதில் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.

அதனால் தமக்கு அரச உதவி வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மூன்று ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் என நான்கு குழந்தைகள் கடந்த மார்ச் மாதம் பிறந்தனர்.

குழந்தை மருத்துவ வல்லுநர் சிவலிங்கம் ஜெயபாலனின் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் குழந்தைகளுக்கான மாதாந்த சிகிச்சை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

“நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதில் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ வல்லுநர் சிவலிங்கம் ஜெயபாலன் வழிவகைகளை முன்னெடுத்துக் கொடுத்தார்.

எனினும் எமக்கு இதுவரை எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை. நாள் ஒன்றுக்கு ஒரு பால்மா பெட்டியினை வாங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளோம்” என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
SHARE