Tuesday 1 September 2020

இலங்கையில் இரு தினங்களில் 59 கொரோனா தொற்றாளர்கள்..!!!

SHARE

நாட்டில் கடந்த இரு தினங்களில் 59 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்கிழமையும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்தது.

இன்று செவ்வாய்க்கிழமை கட்டாரிலிருந்து வருகை தந்த 22 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டது.

இதேபோன்று நேற்று திங்கட்கிழமை மாத்திரம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொற்றுக்குள்ளாகிய 37 பேர் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் மூவர் இந்தியாவிலிருந்தும் இருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் 32 பேர் கட்டாரிலிருந்தும் வருகை தந்தவர்களாவர்.

அதற்கமைய இன்று மாலை வரை நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3071 ஆக அதிகரித்துள்ளதோடு , அவர்களில் 2879 பேர் குணமடைந்துள்ளனர்.

180 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 54 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 52 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
SHARE