Monday, 24 August 2020

SPBயின் உடல் நிலை குறித்து மகன் சரண் விளக்கமளிப்பு ..!!!

SHARE

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமடைந்துவிட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என மகன் எஸ்.பி.பீ.சரண் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 5 ஆம் திகதி சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரின் உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில். புதிதாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தற்போது கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அவரின் மகன் எஸ்.பி.பீ சரண் அதை மறுத்துள்ளார்.

இது தொடர்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சரண், தனது தந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தேவையற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் கோரியுள்ளார்.
SHARE