சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வைத்து வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கான மகஜரினை அருந்தந்தையர்கள் சின்னத்துரை லீயோஆம்சொங், ம.ரெக்ஸ் மற்றும் அருட்சகோதரி அண்ரனிற்ரா மாற்கு ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாடத்தில் கலதுகொண்டவர்கள்,
கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே?
உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?
கொலைகாரன் நீதி வழங்க முடியாது.
சர்வதேசமே! எம் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட எமது உறவுகளைத்தேடி பத்தாண்டுகளாக கண்ணீரோடு நாம். இது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும்,
வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?
என கோசங்களை எழுப்பியவாறும் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட் குறித்த போராட்டத்திற்கு ஆரவாக பொதுமக்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்