Tuesday 25 August 2020

வர்த்தகக் கண்காட்சிக்கு முன்கூட்டியே பணம் செலுத்தினாலே அனுமதி வழங்க வேண்டும் - யாழ்.மாநகர சபை தீர்மானம்..!!!

SHARE

யாழ்ப்பாண நகரில் வர்த்தகக் கண்காட்சியை நடத்துபவர்கள் 2018 முதல் மாநகர சபைக்கான நிதிகளை முழுமையாக செலுத்தாது அரைகுறையாகவே செலுத்துகின்றமையினால் 2021ஆம் ஆண்டிற்கான அனுமதிக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டது.

மாநகர சபையின் ஓகஸ்ட் மாத அமர்வு இன்று மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலமையில் நடைபெற்றது. இவ் அமர்விலேயே மேற்படி விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கருத்துத்து தெரிவித்த உறுப்பினர் கிருபாகரன், 2019ஆம் ஆண்டு 3 மில்லியன் ரூபா செலுத்தவேண்டிய போதும் அரைவாசி தொகை 15 இலட்சம் மட்டுமே செலுத்தினர். 15 இலட்சமாக யார் அனுமதி வழங்கியது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் ந.லோகதயாளன், 2019ஆம் ஆண்டு 15 இலட்சம் செலுத்தியதாக கூறுவதும் தவறனாது. ஏனெனில் 2019ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று இடம்பெற்ற கண்காட்சிக்கான பணம் 2019-09-11 அன்றே 13 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா மட்டுமே செலுத்தப்பட்டது.

ஆயிரம் ரூபா விண்ணப்பம் எடுக்கும் எமது வரி இறுப்பாளர்களே வற்வரியை மேலதிகமாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த 15 இலட்சம் தீர்மானிக்கப்பட்டவர்கள் வற் வரியினையும் சேர்த்து 15 இலட்சம் செலுத்தியதனால் சபை நிதியாக 13 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா மட்டுமே சபைக்கு கிடைத்துள்ளது.
SHARE