Saturday 29 August 2020

தமிழ் மக்கள் தந்த ஆணை எதிர்வரும் ஐந்து வருட சேவை ஊடாக நன்றி சொல்வேன் - பாராளுமன்றத்தில் அங்கஜன்..!!!

SHARE

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்றைய தினம் (28) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஆற்றிய “கன்னியுரை”

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் மக்களின் பிரதிநிதியாக வருவதற்கு வாய்ப்பு தந்த யாழ் கிளிநொச்சி உறவுகளுக்கு இந் நேரம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நன்றி என்ற ஒரு வார்த்தை ஊடாக என் மக்களுக்கு நன்றியை தெரிவிக்க முடியாது தமிழ் மக்கள் எனக்கு மிகப்பெரிய ஆணை ஒன்றை தந்துள்ளனர். அந்த ஆணையை எதிர்வரும் ஐந்து வருடங்கள் தமிழ் மக்களுக்கு செய்யவிருக்கும் பாரிய சேவை ஊடாக தான் நன்றி சொல்ல முடியும்.

இன்று என்னுடைய மற்றும் என் கட்சியுடைய வெற்றி ஒரு வரலாற்று சாதனையாக பேசப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது அதே போல் யாழ் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்கினை எம் மக்கள் எனக்கு தந்துள்ளனர். அது மட்டுமின்றி வரலாற்று தொகுதியான உடுப்பிட்டி தொகுதியில் ஒரு பாரிய வெற்றியை மக்கள் எமக்கு தந்துள்ளனர். இந்த வெற்றிக்காக மக்களுக்கு அடிபணிந்து அவர்கள் தேவைகளை நாம் செய்து கொடுப்போம் என இந்த உயரிய சபையில் சொல்ல விரும்புகின்றேன்.

இந்த அரசாங்கமும் அதிமேதகு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும் தமிழ் மக்களின் வரலாற்று ஆணைக்குமதிப்பளித்து எனக்கு இரு பெரும் பதவிகளை தந்துள்ளனர். ஒன்று உரிமைக்காக பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் மற்றையது எனக்கு ஆணையிட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்.

இந்த நேரம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் கௌரவ முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் கட்சியின் செயலாளர் தயாஸ்ரீ ஜெயசேகரா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது செயல் திட்ட வரைவானது “என் கனவு யாழ்” என்ற தொனிப்பொருளில் கொடுத்து இருந்தோம்.

மக்கள் எனக்கிட்ட ஆணை ஆனது அரசுடன் இணைந்து செயற்படும் நான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றோருக்கு கிடைத்த ஆதரவானது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த ஆதரவிற்கு சமமானதாகும். ஆகவே அதி கூடிய மக்கள் சொல்லியிருக்கும் செய்தி யாதெனில் யாழ் கிளிநொச்சி வாழ் மக்கள் நீண்ட காலமாக இழந்த தகுதிகளை பெற்று கொடுக்க வேண்டும் என்று, மூன்றில் இரண்டு பெருபான்மை ஆதரவு உள்ள அரசாங்கத்தின் ஊடாக எங்களுடைய அடிப்படை தேவைகளாக காணப்படும் வீடமைப்பு, குடிநீர், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம், கடற்றொழில் போன்ற அனைத்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதே நேரம் உரிமை என்ற விடயத்திற்காகவும் தான் எனக்கு இவ் ஆணை கிடைத்துள்ளது. உரிமை என்று சொல்லும் போது அதற்கான தீர்வு ஒன்றல்ல பல தீர்வுகள் இருக்கின்றது. அந்த தீர்வுகளை பெற்று கொடுப்பது பொருளாதார ரீதியான தீர்வு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரிற்கும் தீர்வு நிச்சயமாக முக்கியம் மற்றும் மீள்குடியேற்றம் செய்து முடிக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் . என கூறினார்.

- அங்கஜன் இராமநாதன் ஊடகப்பிரிவு-
SHARE