35 இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்த நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானிக்கு அமைய நிதி மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஆர்.எம் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுய தொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரசாங்க வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக டபுள்யூ.எம்.என்.பி ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளராக எச்.டி கொடிகார, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக ரஞ்சித் அபேசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.பி.ஜி குமாரசிறி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளராக பி.சி கருணாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.